Breaking News

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணமடைந்த மருத்துவர் மற்றும் செவிலியர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி முதலமைச்சருக்குப் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு மரணமடைந்த மருத்துவர் மற்றும் செவிலியர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி முதலமைச்சருக்குப் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம்!

மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் அறிக்கை:

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு அப்பணியின் போது ஏற்பட்ட தொற்றின் காரணமாக மரணமடைந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷா மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில்

மருத்துவர் அப்ரோஸ் பாஷா BUMS.MD. (Neuro).Ph.D சென்னை, திருவல்லிக்கேணியில் பிரபல யுனானி மருத்துவர். இவர் கோவிட் 19 தடுப்பு பணிக்காகச் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அப்ரோஸ் பாஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு ஓமந்து£ரர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் கடந்த 27.5.2020 அன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் கொரோனாவால் இறக்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மரணமைந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷாக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பான சேவையில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் அப்ரோஸ் பாஷா குடும்பத்தினருக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையையும், பல் மருத்துவரான அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கி உத்திரவிட வேண்டும் எனவும், அதேபோல் பணி ஓய்வு பெற்றும் அரசு உத்தரவு காரணமாகப் பணி நீடிப்பு பெற்று கொரோனா நோயாளிகளுக்குப் பணிவிடையில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்தினருக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கத் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
மாயவரம் ஜெ.அமீன்
தலைமை நிலைய செயலாளர்
மமக

Check Also

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை குறைத்திடக் கோரி கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை குறைத்திட வலியுறுத்தியும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருவாரூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *