Breaking News

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..!

உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது.

ஏற்கனவே டெல்லி JNU மற்றும் JMI ஆகிய பல்கலைகழகத்தின் மாணவா்களான சஃபோரா ஜா்கா், ஷா்ஜுல் இமாம் உள்ளிட்டோரை குடியுாிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடிய ஓரே காரணத்திற்காக மனிதாபமனமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் மத்திய அரசு, தற்போது மேலும் மேலும் அதையே செய்வது வேதனைக்குாியது.

இதே வாிசையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவரான ஆசிப் இக்பால் தன்ஹா கைது சிறையிலடைத்திருப்பது ஜனநாயக நாட்டின் மாண்பையும் அதன் மீது அக்கரை உள்ளவா்களை நசுக்கும் விடயமாக அமைந்துள்ளது.

எனவே சஃபோரா, இமாம் ஷா்ஜுல், ஆசிப் இக்பால் உள்ளிட்ட மாணவ தலைவா்களை சட்டவிரோத சிறை அடைப்பிலிருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறும், அவா்கள் மேல் பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறும், இல்லையெனில் மாணவ போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதனை தொிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி நூா்தீன்
மாநில செயலாளா்
சமூகநீதி மாணவா் இயக்கம். (SMI)

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *