Breaking News

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

இளையாங்குடியில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த 7 ஆன்மீக சுற்றுலா பயணிகள்,இந்தோனேசியாவை சேர்ந்த 4 ஆன்மீக சுற்றுலா பயணிகள் 11 நபர்களை பிணையில் விடுவிக்க கோரி இராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று 18.05.2020 ஆன்மிக சுற்றுலா பயணிகளை விடுவிக்ககோரி மனு மீதான விசாரணையில் நீதியரசர் அனைவரையும் பிணையில் விடுவித்தார்.

வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கணேஷ் பிரபு அவர்களிற்கும்,வழக்கறிஞர் ஜிப்ரி அவர்களிற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் வளங்களை வழங்க பிராத்தனைகள்.

எம்.எச்.ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

Check Also

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது ஆளுநரின் விஷமக் கருத்து:

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *