Breaking News

இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல்

குவைத் பொது மன்னிப்பில், சட்டத்திற்க்கு புறம்பாக தங்கியிருந்தவர்கள் இந்தியா செல்வதற்காக தமுமுக சார்பாக இந்திய தூதரகத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற புதிய பாஸ்போர்ட்களை வாஃப்ரா பகுதியில் உள்ள நபர்களுக்கு தமுமுக வாஃப்ரா கிளை தலைவர் S.V.பாளையம் ஷாஜஹான் அவர்களின் தலைமையில் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது.

கொரோனாவால் வேலை இல்லாமல் இருக்கக்கூடிய வாஃப்ரா பகுதி சகோதரர்களுக்கு மண்டல தலைவர் லால்குடி ஜபருல்லாக்கான் துணை தலைவர் கட்டிமேடு வசீம் மமக செயலாளர் ஆக்கூர் முஜிபுர் ரஹ்மான் மண்டல பொருளாளர் லால்குடி சஹாபுதீன் ஆகியோர் கலந்துக்கொள்ள, வாஃப்ரா கிளை தலைவர் ஷாஜஹான் அவர்களின் ஒத்துழைப்போடு சுமார் 20 நபர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Check Also

500 இந்திய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய குவைத் தமுமுக

15ஆம் கட்டமாக குவைத் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கொரோனா நிவாரணப் பொருட்கள் தமுமுக மண்டல செயலாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *