Breaking News

தமுமுக அவசர உதவிகுழு

கொரோனா தொற்று தமிழகத்தில் தொடங்கிய உடன் ஊருக்கு ஊர் பல அழைப்புகள் தமுமுக தலைமைக்கு வந்தவண்ணம் இருத்தன.

போதாதகுறைக்கு சுகாதாரதுறை செயலாளர் பீலா ராஜேஸ் அவர்கள் டெல்லி சென்றுவந்தவர்கள் பல பேர் செல்போணை அனைத்துவிட்டனர் என்று தமிழகத்தில் பரபரப்பை துவக்கி அடுத்த நாளே அனைவரும் வந்து ஒத்துழைப்பு தந்தனர் என கூறி டெல்லி மாநாடு, சிங்கிள் சோர்ஸ் என்ற பெயரை பரபரபிற்குள்ளாக்கிய நாளிளேயே தமுமுக தலைமை கொரோனா அவசரகுழு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள பாசிடிவ் கொரோனா சிகிச்சை பெறும் 27 அரசு மருத்துவமனை களிலும், நெகடிவாக இருந்த மாவட்ட மருத்துவமனைகளிலும் தமுமுகமூலம் கண்காணிக்கும் குழுக்களை நியமனம் செய்தது. இவர்களின் பணி சரியான தகவல்களை தலைமைக்கு அளிப்பது என்ற அடிப்படையில மருத்துவமனை களில் அனுமதிக்கப்படும் டெல்லி சென்ற தப்லீக் நபர்கள் பாசிடிவ் மற்றும் மூன்று நாட்கள் கழித்து ரிசல்ட் வந்தவுடன் நெகடிவ் நபர்கள் இல்லம் திரும்புதல், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சுழல்களை உரிய அரசு அதிகாரிகளிடத்தில் கொண்டு சென்று தீர்வு காண்பது,


பாசிடிவ் குடும்பத்தார்கள் மற்றும் டெஸ்ட் எடுக்கும் நபர்கள் பற்றிய சரியான தகவலை தினந்தோறும் திரட்டி வந்தது. 
தலைவர் MH.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் பல வேலைகளை தலைமை நிர்வாகிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது அதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள தமிழக மக்களின் தேவைகளுக்காக ஒரு குழவும், தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் தகவல் மற்றும் அவர்களின் அசௌகரியங்களை தீர்க்க ஒரு குழுவும், கன்டைன்மென்ட் பகுதிகளில் ஏற்படும் சிரமங்களை களைய அந்தந்த பகுதியை சார்ந்த பல இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு குழுவும், அதனை கண்காணிக்கும் பொறுப்பு, சங்கிகளால் பரப்பப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் சட்டரீதியாக அணுகவேண்டிய செயல்பாடுகளை கவணிக்க ஒரு குழு என உருவாக்கப்பட்டது.

மேற்குறிபிட்ட பல குழுக்களும் பல்வேறு பணிகள் செய்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் மாவட்ட அளவில் இதுவரை உணவுவழங்குதல், உணவுபொருட்கள் வழங்குதல், கிருமிநாசினி தெளித்தல் என மாவட்ட மற்றும் நகர,கிளைகளில் சமுக அக்கறையுடன் வேலைகளும் செய்யப்பட்டன. இதுவரையிலும் தமிழகம் முழுவதும் 4 கோடிக்கும் மேலாக உதவிகள் செய்துவந்துள்ளது குறிபிடதக்கது.

தமுமுக அவசர உதவிகுழு தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படும் புதிய இடர்பாடுகளை உரிய ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எடுத்து சென்று தீர்வுகளும் பெற்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தப்லீக் மற்றும் தொடர்பு சகோதர்ர்கள் மருத்துவமனையில் அனுமதிக்பட்ட நிலையில் 29/04 இன்றைய அளவில் 170 நபர்கள் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். அதிலும் 25 நபர்கள் மட்டுமே டெல்லி சென்று வந்தவர்கள் மீதம் அவர்களின் தொடர்பு என தமுமுக கொரோனா அவசரகுழுவின் கள ஆய்வு தெரிவிக்கிறது.

இறைவன் நாடினால் இன்னும் இரண்டு மூன்றுநாட்களில் அதிகமாக இல்லம் செல்வார்கள் எனவும் குறிப்பிடுகிறது.
மேலும் 21 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்கள் சிகிச்சையில் உள்ளனர் என்ற நல்ல தகவலும் அளித்தது. தமிழகத்தில் ஆரம்பம் முதலே சுகாதாரதுறை மற்ற மாநிலங்களை விடவும் (கேரளாவை தவிர) நல்ல திட்டமிடுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குதல், கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுத்தல் என பணிசெய்தது பாராட்ட தக்கது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் கடந்த 14 நாட்களாக பாசிடிவ் இல்லை என்ற சுழல் இருக்கும்பட்சத்தில்

சென்னையில். சிங்கிள் சோர்ஸ் மல்டிசோர்ஸ்ஆக மாறி இருக்கும் இந்த தருணத்தில் அரசு அறிவுறுத்தி உள்ள தனிமையாயிருத்தல், கைகளை கழுவுதல், விலகியிருதலை கண்டிப்பாக கடைபிடிக்க வேணடுமாறும் தமுமுக அவசர உதவிகுழு வழியுறுத்துகின்றது.

Check Also

“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு

மறக்க முடியாத டிச.6 நீதி பாதுகாப்பு தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் வக்கிரம் கொண்ட சங்பரிவார வன்முறை கும்பலின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *