Breaking News

முதன் முறையாக இணையத்தின் வாயிலாக தமுமுகவின் விழி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் !

முதன் முறையாக இணையத்தின் வாயிலாக தமுமுகவின் விழி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் !

தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இணையத்தின் ஊடாக 23.03.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.

தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமுமுக பொதுச்செயலாளர் (பொறுப்பு) பேரா.ஹாஜாகனி, விழி அமைப்பின் மாநிலச் செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா, மாநிலப் பொருளாளர் பேரா.அபுல் பாசல், மாநில துணைச் செயலாளர்கள் பொறியாளர் அப்துல் சமது, புதுமடம் ஹலீம், சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்தனர்.

விழி அமைப்பின் சார்பாக விரைவில் நடைபெற இருக்கின்ற பயிற்சியாளர்களை உருவாக்கும் திட்டம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான திட்டங்கள் உள்ளிட்டவை கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *