Breaking News

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி

கடந்த 10.03.2020 மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.சமூகநீதி மாணவர் இயக்கம் SMI’யின் முதல் கொடியேற்றும் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் செங்கல்பட்டு வடக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. கொடியை தமுமுக தலைமை பிரதிநிதி A.S.M.ஜுனைது அவர்கள் ஏற்றி வைத்தார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் எம்.யாக்கூப் முன்னிலை வகித்தார்.

தமுமுக மமக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொருளாளர் இப்ராஹிம், தமுமுக ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் நரியங்காடு பைசல், மமக மாவட்ட செயலாளர் சபியுல்லா சமூகநீதி மாணவர் இயக்கம் SMI மாவட்ட செயலாளர் S.அப்துல் ரகுமான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆஷிக் ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் கிளை ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *