Breaking News

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்ச் 15,2020 காரைக்காலில் CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை கண்டித்தும், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி நாட்டை பிளவுப்படுத்த துடிக்கும் மத்திய மதவாத பிஜேபி அரசை கண்டித்தும், CAA, NRC, NPR ஆகிய கருப்பு சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில், ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்தி வந்த முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கலவரத்தை தூண்டி துப்பாக்கியால் சுட்டு முஸ்லிம்களின் உயிர்களையும் மற்றும் உடமைகளையும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்திய சங்பரிவார் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரியும், கலவரத்தில் ஈடுபட்டுள்ள சங்பரிவார் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கலவரத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துவந்த டெல்லி காவல்துறையை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்கால் நகர தலைவர் முஹம்மது ஷெரிப் தலைமை வகித்தார். தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சாமிநாதன், சமூக செயல்பாட்டாளர் புதுவை காயத்ரி ஸ்ரீகாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமுமுக தலைமை பிரதிநிதி அலாவுதீன், தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசேன், மமக மாவட்ட செயலாளர் முஹம்மது ஆசிக், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், மாவட்ட துணை தலைவர் முஹம்மது மாசிம், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது இபுறாஹும், முஹம்மது சிக்கந்தர், முஹம்மது மெய்தீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத் நிர்வாகிககள், சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கலவரத்தை திட்டமிட்டு தூண்டிய மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Check Also

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *