Breaking News

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி காமராஜபுரத்தில் தமுமுக-வின் மாபெரும் பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் காமராஜர்புரத்தில் 13.03.2020 குடியுரிமை திருத்த சட்ட பாதுகாப்பு பொதுக்கூட்டம் செங்கை வடக்கு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன், தமிழக காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் சித்திக். சென்னை மக்கா பள்ளி இமாம் முகமது மன்சூர் காசிமி, சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தாம்பரம் அன்சாரி, தமுமுக தலைமை கழக பேச்சாளர் சலீம்கான், எஸ்டிபிஐ கட்சி மாநில பேச்சாளர் உசேன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர் அருள்பிரகாசம், மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் அனைவரும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.

பின்னர் பொதுக்கூட்டம் முடிவில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக கோஷம் எழுப்பினர்

இதில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பேரூர் கிளை வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *