Breaking News

CAA, NRC, NPR குறித்து ஐநா-வில் கண்டனம் தெரிவித்த தமிழக வழக்கறிஞர்

CAA, NRC, NPR குறித்து ஐநா-வில் கண்டனம் தெரிவித்த தமிழக வழக்கறிஞர்

மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் அப்ரார் அஹமது ஐ.நா.மன்றத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு கண்டனங்களை பதிவு செய்தார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 43 வது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரியை திருத்தச்சட்டம் மற்றும் டெல்லி வன்முறை குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அப்ரார் அஹமத் கண்டனங்களை முன்வைத்து பேசியுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் பேசிய அவர்;

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான சட்டமாகும். மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பை அர்த்தமற்றதாக்குகிறது.

மேலும் இது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு எதிரான மீறலாகும்.

NPR மற்றும் NRC 2003 குடியுரிமைச் சட்டத் திருத்தத்துடன் வருகிறது. இந்த சட்டத்தின் மூலம் இந்திய குடிமக்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில், ஐந்து வயதிற்குட்பட்ட 24 மில்லியன் குழந்தைகள் தங்களது பிறப்புகளை பதிவு செய்யவில்லை என்று UNCIF தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த எண்ணிக்கை நிச்சயமாக மிக அதிகமாக இருக்கும். பழங்குடியினர், தலித்துகள் மற்றும் ஏழை சமூகங்களின் பிறப்பு சான்றிதழ் என்பது கேள்விக்குறியே.

ஒவ்வொரு வீடுகளின் வழியே நடக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெரிய ஊழலை உண்டாக்கும். இந்த பணிகள் கீழ்மட்ட அதிகாரிகளின் கீழ் நடைபெறும் என்பதால் ஒரு வேளை சந்தேகத்திற்குரிய குடிமகனாக கருத்தப்பட்டால் அவர்களிடம் பேரம் பேசவும் வாய்ப்புள்ளது.

குடும்ப அட்டை வாழங்குவதில் கூட லஞ்சம் பெற்று வழங்கும் அவலம் இருக்கும் சூழலில் குடியுரிமையை நிரூபிக்க கீழ்மட்ட அதிகாரிகளால் பெரிய ஊழலை இந்த சட்டம் உருவாக்கும்.இது முற்றிலும் ஏழை மக்களுக்கு எதிராக செயல்படக் கூடும் என்றார்.

மேலும், இந்த சட்டம் முஸ்லீம் எதிர்ப்பு, பெண்கள் எதிர்ப்பு, தலித்துகள், பழங்குடியினர் எதிர்ப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்று பாலினங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எதிரானதாகும்.

CAA, NPR மற்றும் NRC ஆகியவை முற்றிலும் அரசியலமைப்பிற்கு முரணானவை. NPR மற்றும் NRC ஆகியவை பெரும் பணத்தை வீணாக்குவதோடு, நாடு முழுவதும் மக்களின் துயரத்திற்கு வழிவகுக்கும்.

கோடிக்கணக்கான மக்களை பணமதிப்பிழப்பு செய்வதோடு, அவர்களை நிலையற்ற மற்றும் உரிமைகள் இல்லாமல் செய்யும். குறிப்பாக தற்போதைய அரசியலில் இது வகுப்புவாத மற்றும் சாதி அடிப்படையிலான இலக்குகளுக்கு வழிவகுக்கும்.

முஸ்லீம்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள் மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மக்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று அப்ரார் அவையில் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற வன்முறைகள் குறித்தும் அவையில் பேசினார்.

மேலும், அமெரிக்க, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் இந்த சட்டத்திற்கு கடும் கண்டனத்தையும், கவலையும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சட்டம் பெரும் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குடியுரமை திருத்தச்சட்டத்திற்கு உலக நாடுகளில் கண்டனங்கள் எழுந்து வரும் சூழலில், தமிழகத்திலிருந்து வழக்கறிஞர் அப்ரார் அஹமதின் குரல் அவையில் ஒலித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 42 வது ஐநா கூட்டத்தில் சூழியல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனது குறித்தும், தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து கேள்விகளை முன்வைத்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..

நன்றி..
Dailyhunt

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *