Breaking News

மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் இந்து சகோதரர்க்கு உதவிய முஸ்லிம்கள்..

மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயம் இந்து சகோதரர்க்கு உதவிய முஸ்லிம்கள்..

மார்ச் 14-2020 இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ன்றியம்,ரெகுநாதபுரத்தை சேர்ந்த அங்குச்சாமி அவர்களின் மகன் நாகநாதன் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

இறந்த நாகநாதனின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்திட உதவிடுமாறு கேட்ட திரு.அங்குசாமி குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று தமுமுக சமூக நலத்துறையின் ரியாத் மண்டல செயலாளர் சகோதரர் அப்துல் ஹமீது அவர்களால் நாகநாதனின் உடலை தாயகம் அனுப்புவதற்கான சவூதி அரசு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் அவர்களை தொடர்பு கொண்டார்..

நாகநாதனின் உடல் விமானம் மூலம் திருச்சி விமானநிலையம் வந்தடைந்தது. திருச்சி தமுமுக நிர்வாகிகள் உடலை பெற்று, இராமநாதபுரம் தமுமுக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினார்கள்..

இராமநாதபுரம் வந்த நாகநாதனின் உடலுடன் மாநில மீனவர் அணி
துணைச் செயலாளர் சரீப், மாவட்ட துணை செயலாளர் மேலப்புதுக்குடி ரைஸ் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமிது, தமுமுக ஊடக பிரிவு செயலாளர் யாசர் அரபாத், தமுமுக ஒன்றிய துணை செயலாளர் பெரியபட்டிணம் காதர்ஷா, அல்தாப், சதாம் உசேன், சுஜாதுல்லாஹ் ஆகியோர் ரெகுநாதபுரம் சென்று திரு.அங்குசாமி குடும்பத்திடம் நாகநாதனின் உடலை நல்லடக்கம் செய்ய ஒப்படைத்தனர்…

சாதி, மத வேறுபாடின்றி சமூக, சமய நல்லிணக்க நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமுமுக இத்தகைய அறப்பணிகளை செய்கிறது என அங்கு கூடியிருந்த மக்கள் தமுமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்…

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *