Breaking News

இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு

இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு 

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் சந்திப்பு நடத்தினார். சிஏஏ குறித்து ஏற்பட்டிருக்கும் ஐயப்பாடுகளை களைவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, “சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். என்பிஆரில் சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *