தமுமுக மகளிர் அணி சார்பாக கருத்தரங்கம்
08-03-2020 (ஞாயிறு) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை – ஆர்.கே.நகர் பகுதி சார்பாக மகளிருக்கான சிறப்பு கருத்தரங்கம் பகுதிக்குட்பட்ட 39வது வட்ட அலுவலகம், செரியன் நகரில் நடைபெற்றது.
தமுமுக/மமக – ஆர்.கே நகர் பகுதி தலைவர் A.அப்துர் ரசாக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 39வது வட்ட தமுமபே செயலாளர் சகோதரி A.பர்வீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தமுமுக/மமக – வட சென்னை மாவட்ட தலைவர் சகோ.F.உஸ்மான் அலி அவர்கள், “சமூகப்போராட்டங்களில் பெண்களின் முன்னெடுப்பு” என்ற தலைப்பிலும், சமூக செயற்பாட்டாளரும் ஜனநாயக மாதர் சங்க பிரதிநிதியும் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போராடி வரும் சகோதரி கவிதா கஜேந்திரன் அவர்கள், “இந்திய தேசத்தில் பெண்களின் எழுச்சி” என்ற தலைப்பிலும் சிறப்பான கருத்துகளை சகோதரிகளுக்கு மத்தியில் வழங்கினர்.
இக்கருத்ததங்கில் பகுதிக்குட்பட்ட 38, 39 & 47 ஆகிய வட்டங்களிலிருந்து சகோதரிகள் திரளாக பங்கெடுத்து சிறப்பித்து பயனடைந்தனர்.