Breaking News

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவர செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு அச்செய்திகளை வெளியிட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டி ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சிகள் 48 மணி நேர ஒளிபரப்புக்குத் தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நாட்டின் தலைநகரில் ஒருசாரார் அரங்கேற்றிய கொடூரங்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளக்கூடாது; கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குறித்த செய்திகளை ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி நிறுவனங்கள் வெட்டவெளிமாக்கியுள்ளது பாராட்டிற்குரியது.

ஊடகங்கள் மீது நிபந்தனைகளை விதித்து அதன் ஒளிபரப்பைத் தடை செய்வது ஆகிய செயல்கள் ஊடகங்களின் குரல்வலையை நெறிக்கும் செயலாகும். ஒளிபரப்புக்குத் தடைவிதிப்பு போன்ற மோசமான நடவடிக்கைகள் மூலம் ஊடகங்களை ஒடுக்கலாமே தவிரப் பொதுநலனின் அக்கறை உள்ள ஒரு ஊடகத்தையும் ஊனமாக்க முடியாது என்பதை மத்திய அரசு புரிந்துகொண்டு இதுபோன்ற தடை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *