Breaking News

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

செய்யாறில் CAA NRC NPR எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

மார்ச் 06, 2020 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர தலைவர் H.கமால் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது ,
துணை பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப்,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்புச் செயலாளர் சிபி சந்தர், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் அச்சரபாக்கம் S.M.ஷாஜகான்
தலைமை கழக பேச்சாளர் காஞ்சி சலீம் கான், உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தமுமுக மகளிர் அணி சார்பில் விண்ணை முட்டும் ஆசாதி கோசம் எழுப்பப்பட்டது.

பாசிச சித்தாந்த சட்டங்களுக்கு எதிராக பெண்கள் குழந்தைகள் ஜமாத்தார்கள் இளைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இறுதியாக நகரச் செயலாளர் ஜஹாங்கீர் நன்றி உரையாற்றினார்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *