Breaking News

சிவகாசியில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சிவகாசியில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!
 மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழின் விருதுநகர் மாவட்டச் செய்தியாளர் கார்த்தி என்பவர் மீது மர்ம நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி தப்பியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்து£ர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் உள்ள உட்கட்சி பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் ராஜவர்மனுக்கு ஆதரவாக உள்ளார் எனச் செய்தி வெளியிட்ட காரணத்தால், செய்தியாளர் கார்த்தியை அடையாளம் தெரியாத நபர் தொலைப்பேசியில் அழைத்து இந்த செய்தி தொடர்பாக மேலும் பல தகவல்களை அளிப்பதாகக் கூறி வரவழைத்து கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் அதனைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு, இந்த தாக்குதல்களை சாதாரணமானத் தாக்குதலாகக் கருதி மௌனம் காப்பது ஏற்புடையது அல்ல.

எனவே, செய்தியாளர் கார்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்து அவர்களை சட்டரீதியாகத் தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *