Breaking News

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
 மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஈரானில் இந்தியாவிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் “ஒப்பந்த” அடிப்படையில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர்.

ஈரானில் தற்போது கொரோனா பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள் மேலும் பலர் நோய் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக குமரி மீனவர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப விரும்புகின்றனர். மேலும் அவர்களை சொந்த நாட்டிற்கு திரும்பச் சென்று விடுமாறு படகுகளின் உரிமையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரானில் இருந்து இந்தியாவிற்கு போதிய அளவிற்கு விமானங்கள் இயக்கப்படாததின் காரணமாக தமிழக மீனவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும் ஈரானில் சிக்கித்தவிக்கும் தங்களை மீட்க சிறப்பு விமானம் அல்லது கப்பலை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மீனவர்களின் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈரான் நாட்டில் தவித்துக்கொண்டிருக்கிற தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கோருகிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் 6 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *