Breaking News

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு

வாணியம்பாடி 10 நாள் ஷாஹின்பாக் தொடர் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு

பிப்ரவரி 28,2020 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 10 நாட்களாக CAA,NRC,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தாக்குதலை கண்டித்தும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் பின்னர் செய்தியாளர் சந்திப்பில்

மறைந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் குறுகிய காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் குடியாத்தம் மக்களின் நன் மதிப்பை பெற்றவர் அவர்கள் குடும்பத்திற்கும் திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் குடியுரிமைச் சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை தமிழகத்தில் CAA எதிராக தமிழகத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக நடந்து வருகிறது தமிழக முதலமைச்சர் அவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சில கேள்விகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவித்திருக்கிறார் இது திருப்தி அளிக்கக்கூடிய பதிலாக இல்லை மத்திய பாஜக வின் அங்கமாக இருக்கக்கூடிய JDU நிதிஷ்குமார் ஆட்சி செய்யக்கூடிய பீகார் சட்டமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் அந்த அடிப்படையில்NPR எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தான் தமிழக மக்களுடைய எதிர்பார்ப்பு இருக்கிறது அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்ற முன் வந்தால் தான் தமிழகத்தில் நடைபெற்று வரக்கூடிய இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் இல்லாவிட்டால் இந்த போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்தார் பின்னர் போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மத்திய அரசு ஒரு முட்டாள்தனமான அரசு என்று மத்திய அரசை விமர்சனம் செய்தார்.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *