Breaking News

சைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை

சைதாப்பேட்டையில் டெல்லியில் கலவரத்தை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை

பிப்ரவரி 27,2020 டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போராட்டத்தில்,CAA எதிரான பாதகைகளை கையில் ஏந்தியபடி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமுமுக துணைத்தலைவர் பி.எஸ் ஹமீது தமுமுக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் ஹனிபா அவர்கள் இளைஞரணி மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமுமுக மாநில துணை தலைவர் பி.ஊஸ் ஹமீது,

*குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் அதேபோல் இந்திய நாட்டை உருவாக்கிய இஸ்லாமியர்களை அகதிகளாக்கும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

*டெல்லி சாஹின் பாக் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கலவரம் மேற்கொள்ள நினைத்து அது முறியடிக்கப்பட்டது.

*கபில் மிஸ்ரா எனும் பா.ஜ.க தலைவர் பேரணி நடத்தி இஸ்லாமியர் வியாபார ஸ்தலங்களை சூறையாடி உள்ளனர்.

*கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும்.

*காவல்துறை முன்னிலையிலே இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது.

*ஊடகவியலாளர்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

*36 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

*உலகமுழுவதும் இந்தியாவிற்கு ஒரு தலைகுனிவாக டெல்லி கலவரம் அமைந்துள்ளது.

*மோடி , மற்றும் அமித்ஷாவின் தூண்டுதலின் போரிலே இந்த போராட்டம் நடைபெறுகிறது.

*உச்ச நீதிமன்றம் நாட்டை பாதுகாக்க உடனடியாக பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

*குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்து இருந்தால் தமிழக முதல்வர் கடந்த ஒரு மாதம் முன்னமே செய்திருப்பார்.

*இந்த சட்டம் நிறைவேற்றினால் தனது ஆட்சிக்கு பாதிப்பு வரும் என்கிற அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற மறுக்கிறார் தமிழக முதலமைச்சர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *