Breaking News

டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்!
 மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அமைதிவழி போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் குரூரத்தை வெளிப்படுத்திய வரும் சூழலில் நேற்று முதல் டெல்லியில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் கலவரத்தில் முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்துவா? முஸ்லிமா? என மதத்தைக் கேட்டு கண்மூடித்தனமாகத் தாக்குவதும், முஸ்லிம்களின் வணிக நிறுவனங்களை தேடித் தேடி தீயிடப்படும் காட்சிகள் மீண்டும் ஒரு குஜராத்தை நினைவுபடுத்துகிறது.

இந்த கலவரங்களை படம் பிடிக்கச் சென்ற ஊடக நண்பர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி வேதனை அளிக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் தொடங்கி பாஜகவின் அமைச்சர்களும், தலைவர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்ட வெறுப்பு பிரச்சாரமே இந்த கலவரத்திற்கு காரணம். காவல்துறையினருக்கு கெடு விதித்து கலவரத்தை து£ண்டிவிட்ட கபில் மிஸ்ரா எம்.எல்.ஏ. உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் தலைநகரில் இதுபோன்ற பெரிய கலவரம் நடைபெற்றுவரும் சூழலில் மத்திய அரசு அதனை தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் ஒருசாரார் மீது மட்டும் பழிசுமத்தி வேடிக்கை பார்த்து வருவதை கண்டனத்திற்குரியது. இக்கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *