Breaking News

தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது!
 மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்தேசிய முன்னணியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் அருண்ஷோரி இன்று காவல்துறையினரால் எவ்வித அறிவிப்பும், தகவலுமின்றி கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்க்கு எதிராக முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் நடத்தும் போராட்டங்களில் பிற ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும் காவல்துறை, நடைபெறுகின்ற போராட்டங்களை முஸ்லிம்கள் மட்டுமே நடத்தும் போராட்டமாகச் சித்தரித்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தவே இதுபோன்ற கைது நடவடிக்கையை காவல்துறையினர் செய்துள்ளனர்.

தமிழகக் காவல்துறையின் இந்த நடவடிக்கை என்பது போராடும் மக்களின் குரல்வலையை நசுக்கும் செயலாகும். தமிழக அரசின் முஸ்லிம் விரோதப் போக்கையும், ஜனநாயக விரோத போக்கையும் நடைமுறைப் படுத்துவதை இந்தக் கைது சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

தன்னெழுச்சியாகப் நடைபெறும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது எனவும் அமைதி வழியில் அறப்போராட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெறாது எனவும் உறுதியளிக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *