Breaking News

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி
தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

பிப்ரவரி 22,2020.செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான் தொகுப்புரை நிகழ்த்தினார்.

இதில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ் எம் பாக்கர்,விடுதலை சிறுத்தை கட்சி சிபி சுந்தர், எஸ்டிபிஐ கட்சி பொதுச் செயலாளர் உமர் பாரூக், கிறிஸ்தவ நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் இனிகோ இருதயராஜ், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, jaqh மாநில செயலாளர் ஜாகிர் உசேன், அய்யாவழி பாலமுருகன், சிபிஐ முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ரவூப் மற்றும் தோழர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்கள். பின்னர் பொதுக்கூட்டம் முடிவில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக கோஷம் எழுப்பினர்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் பேரூர் கிளை வார்டு நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *