Breaking News

அவிநாசி அருகே வாகன விபத்து: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

அவிநாசி அருகே வாகன விபத்து: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!
 மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, இன்று அதிகாலை கேரளா நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 20 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் அரசு உரிய நிவாரணமும், காயமடைந்துள்ளவர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய மருத்துவச் சிகிச்சையையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *