Breaking News

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி

பிப்ரவரி 06-2020.சொந்த மக்களை அகதிகளாக்கும் கருப்பு சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தின் அவளநிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பாக “குடியுரிமைகாக்கும் சுடர்மிகு சுவடுகள்” என்ற தலைப்பில் CAA-NRC-NPR எதிரான கண்காட்சி நடைப்பெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள், மோடி அரசின் காஷ்மீர் அணுகுமுறையை எதிர்த்து IAS பதவியை ராஜினாமா செய்த திருமிகு. சசிகாந்த் செந்தில் அவர்கள்,முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், பேராசிரியர் அருணன் அவர்கள், திருமிகு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள்,தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது,தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.ஹனீஃபா, மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், மமக அமைப்புச் செயலாளர் அச்சரபாக்கம் ஷாஜஷான் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு பார்வையிட்டனர்.

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் குர்ஷித் உசேன், காயல்பட்டினம் இர்ஷாத்,கோவை அம்ஜத் ஆகியோர் கண்காட்சி சம்மந்தமாக தலைவர்களுக்கு விளக்கினர். சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டனர்.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *