Breaking News

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 06-2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து “இந்தியமே எழுக.! குடியுரிமை காப்போம்.. குடியரசைக் காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நடைப்பெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எழுச்சியுரையாற்றினார். இதில் நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள், மோடி அரசின் காஷ்மீர் அணுகுமுறையை எதிர்த்து IAS பதவியை ராஜினாமா செய்த திருமிகு. சசிகாந்த் செந்தில் அவர்கள்,முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள், பேராசிரியர் அருணன் அவர்கள், திருமிகு பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள், தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது,தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.ஹனீஃபா, மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், மமக அமைப்புச் செயலாளர் அச்சரபாக்கம் ஷாஜஷான் மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் முன்னிலை வகித்தனர். தமுமுக மமக மாவட்ட, பகுதி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டனர்.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *