பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் எம்.ஆர்.நகரில் தமுமுக மமக சார்பாக குடியுரிமை சட்டத்திற்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கலந்தது கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சன் கலந்துக்கொண்டார். மேலும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.எம்.குணங்குடி அனிபா, மாநில விளையாட்டு அணி பொருளாளர் தமீம், வடசென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் அலி, மாவட்ட மமக செயலாளர் கொடுங்கையூர் நசுருதீன்,பகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
