Breaking News

நெல்லை ஏர்வாடியில் தமுமுக மகளிர் அணி நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுக மகளிர் அணி நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் தோழர்.பாலபாரதி, தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில துணை செயலாளர் ஜரீனா,திராவிட இயக்க தமிழர் பேரவை தோழர் உமா,ஆலிமா ஜீனத் ஷரஃபியா ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தினை ஏன் எதிர்க்கிறோம்? என்றும் இச்சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கி பேசி,கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் தமுமுக மாநில துணை தலைவர் P.S ஹமீது,தமுமுக மாவட்ட தலைவர் K.S ரசூல் மைதீன் ,மாவட்ட துணை தலைவர் முகைதீன் அலி,துணை செயலாளர் ஜாவீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டனர்.

Check Also

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *