Breaking News

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக நடைப்பெற்ற மனித சங்கிலியில் தமுமுக-மமக தலைவர்கள் பங்கேற்பு

சென்னை மவுண்ட் ரோட்டில் நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனீபா, மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைநுல் ஆபுதீன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் காஞ்சி.ப.அப்துல் சமது அவர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார் உடன் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் பத்ரி,மாவட்ட,அணி,நகர,கிளை,என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் CAA-NRC-NPR கருப்பு சட்டங்களுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது,தலைமை பிரதிநிதி ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

CAA,NRC,NPR குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிவகாசியில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பில் இன்று 30.01.20 பல்லாவரத்தில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்கள் பங்கேற்றார்

 

 

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *