Breaking News

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகமது சேக் ராவூத்தர் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் எம்.நசுருதீன் சாலிகு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சாதிக் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ஜப்பார், அப்துல் அஜீஸ், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் செய்யது புஹாரி, முகமது யூசுப், பீர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைச்செயலாளர் நெல்லை செ.சுந்தரவள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா, ராவியத் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்துவது, ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக்கழகம், ஜெ.என்.யூ ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பது எனவும், ஈழத்தமிழர்களையும், இஸ்லாமியர்களையும் வஞ்சிக்கும் மத்திய அரசிற்கு துணை போகும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர்.

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *