Breaking News

தென்சென்னை மாவட்டம் நிர்வாகம்: தலைமை நிர்வாகக்குழு அறிவிப்பு

தென்சென்னை மாவட்டம் நிர்வாகம்: தலைமை நிர்வாகக்குழு அறிவிப்பு

தென்சென்னை மாவட்டம் நிர்வாகம், தலைமை நிர்வாக குழு அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு,தென்சென்னை மேற்கு என இரண்டு மாவட்டங்களாக செயல்படும்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 24.01.2020 அன்று வெள்ளிக்கிழமை தலைமை அலுவலகத்தில் தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது தலைமையிலும் மமக மாநில துணைச்செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த நிர்வாககுழு கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலந்தூர் பகுதி நிர்வாகிகள் சோழிங்கநல்லூர் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அரசு வரையறையின் படி காஞ்சி மாவட்டத்தில் இருந்து ஆலந்தூர் சோழிங்கநல்லூர் பகுதி சென்னை மாவட்டத்தில் அரசு இணைத்துள்ளது அதன் அடிப்படையில் தென் சென்னை மாவட்டத்தில் 7 பகுதிகள் வருவதால் தென்சென்னை மாவட்டத்தை இரண்டு மாவட்டமாக பிரிப்பது என்று தலைமை நிர்வாகக்குழு முடிவின்படி 24.01.2020 கூடிய மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் விருகம்பாக்கம் பகுதி,சைதை, தி.நகர், மயிலாப்பூர் பகுதிகளை ஒன்றிணைத்து தென்சென்னை மேற்கு மாவட்டம் என்றும்,

சோழிங்கநல்லூர்,ஆலந்தூர்,வேளச்சேரி பகுதிகளை ஒன்றிணைத்து தென்சென்னை கிழக்கு மாவட்டம் என பிரிப்பது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

தென்சென்னை கிழக்கு மாவட்டத்தில் பொறுப்புக்குழு நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டு, கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகுழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

பொறுப்புக்குழு

1.பனையூர் D.முஹம்மது யூசுப் (பொறுப்புக்குழு தலைவர்)

2,ஆலந்தூர் பிர்தௌஸ்
(பொறுப்புக்குழு உறுப்பினர்)

3.பாலவாக்கம் அஸ்மத் பாஷா
(பொறுப்புக்குழு உறுப்பினர்)

4.வேளச்சேரி முஹம்மது அலி (அடையம்)
(பொறுப்புக்குழு உறுப்பினர்)

5.முஹம்மது கஸ்ஸாலி வேளச்சேரி
(பொறுப்புக்குழு உறுப்பினர்)

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *