Breaking News

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!
 
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்து செய்தி:

குடியரசு தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற வேளையில் நமது நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் நிரம்பியிருந்த அரசியல் நிர்ணயச் சபை அமைக்கப்பட்டு அதில் பெரும் விவாதங்கள் நடைபெற்று நமது அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

பல்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் என வேறுபட்டு இருக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது நமது அரசமைப்புச் சட்டம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதம் ஆகும். இதனால் தான் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகம் முதலியவை நமது நாட்டின் அடிப்படை அம்சங்களெனப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை பண்புகளுக்குப் பேராபத்து வந்துவிடுமோ என்று மக்கள் அச்சப்படும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நிகழ்வுகள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு வகைகளில் இந்த அடிப்படை அம்சங்கள் எல்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

இதே நேரத்தில் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைகளைக் காப்போம் என்று உறுதி கொண்டு மாணவச் சமுதாயம் தொடங்கிய வீரியமிக்க போராட்டங்கள் நாடு முழுவதும் விரிவடைந்து நம்பிக்கையை அளிக்கின்றன.

இந்தக் குடியரசு தினத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாகவும், தேசத்தந்தை காந்தியடிகளின் உணர்வாகவும் திகழும் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்  அடிப்படைகளைப் பாதுகாக்கவும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் அதன் அடிநாதத்தை நிலைநாட்டவும் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *