Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 144 வழக்குகள்: நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 144 வழக்குகள்:
நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட 144 வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் தமுமுக உட்பட 62 மனுக்கள் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க 4வார காலம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

CAA சட்டத்திற்கு தற்போது தடை விதிக்க இயலாது. 4வார காலத்திற்கு பிறகு மத்திய அரசு பதில் மனு அளித்த பிறகு இது குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து அபபோது முடிவுச் செய்யப்படும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

உயர்நீதிமன்றங்கள் CAA குறித்த மனுக்களை ஏற்க கூடாது என்றும் அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களிலிருந்து தொடுக்கப்பட்ட மனுக்கள் தனியாக விசராரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று 22.01.2020 குறிப்பிட்டது.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *