Breaking News

என்.பி.ஆர். விபரங்களைக் கோரும் ரிசர்வ் வங்கியைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்!

என்.பி.ஆர். விபரங்களைக் கோரும் ரிசர்வ் வங்கியைக் கண்டித்து
மனிதநேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்!

தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) பதிவு குறித்த கடிதம் வாடிக்கையாளர்களின் அடையாளங்களில் ஒன்றாக அமையும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள வழிகாட்டலைக் கண்டித்து  முற்றுகைப் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் பங்கு கொண்டு உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது:

“தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) தரவுகள் அடிப்படையில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்படும் என மத்திய அரசின் பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2018–&19க்கான ஆண்டு அறிக்கையின் 15வது அத்தியாயம் தேசிய மக்கள் தொகை பதிவேடு தான் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் படி என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் மற்றும் தலைமைப் பதிவாளர் (Registrar General and Census Commissioner India) குடிமக்கள் பதிவின் தலைமைப் பதிவாளராக(Registrar General of Citizens Registration) செயல்படுவார் என்றும் அது குறிப்பிடுகின்றது.

இந்த உண்மைகளைத் தெளிவாக அறிந்து தான் நாடு முழுவதும் சி.ஏ.ஏ.,-என்.ஆர்.சி.,- என்.பி.ஆர் க்கு எதிராக வீரியமான போராட்டங்கள் நடைபெற்று நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலின் அடிப்படையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் ஆவணங்களில் ஒன்றாக என்.பி.ஆர் விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த வழிகாட்டலை உடனடியாக ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம்” என கூறினார்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன், துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது, துணைப் பொதுச் செயலாளர் எம்.யாகூப், அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம், வடசென்னை மாவட்டத் தலைவர் எப்.உஸ்மான் அலி, தென்சென்னை மாவட்டத் தலைவர் அபூபக்கர் கோரி உட்பட ஆயிரக்கணக்காணோர் இம்முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *