Breaking News

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி பாசனப் பகுதிக்கு பெரும் பேரழிவை உண்டாக்கும் இதுபோன்ற அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களிடம் கருத்தும் தேவையற்றது என மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டின் பசுமையைப் பாழாக்கும் செயல் ஆகும்.

அனைத்துத் துறையிலும் மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கொண்டு வரும் மத்திய பாஜக அரசு தமிழகத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து வருவதை ஆளும் அதிமுக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருவது ஏற்றுக்கொள்ள இயலாதது. ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று சட்டமன்றத்தில் வாக்களித்த அதிமுக அரசு அதுதொடர்பாக எவ்விதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது கண்டனத்திற்குரியது.

எனவே, காவிரிப் பசன பகுதிகளைப் பெரிதும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும், காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *