Breaking News

வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய “NRC, CAA, NPR எதிர்ப்பு மாநாடு”

வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய
“NRC, CAA, NPR எதிர்ப்பு மாநாடு”

ஜனவரி 19,2020.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் NRC-CAA-NPR எதிர்ப்பு மாநாட்டினை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது.இந்த மாநாடு வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது.வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹமத் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜைநுல் ஆபுதீன், தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லாகான், தமுமுக மமக மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக பொருளாளர் துரைமுருகன், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, விசிக பொதுச் செயலாளர் இரவிக்குமார் MP, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பெங்களூரு ஜாமிஆ மஸ்ஜித் கதீப் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷாதி
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத் உருதுவிலும்,சமூகநீதி மாணவர் இயக்க மாநில துணைச் செயலாளர் குர்ஷித் தமிழிலும் எழுச்சி முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக மாநாட்டின் தீர்மானங்களை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாநில துணை செயலாளர் CK சனாவுல்லா வாசித்தார். தமுமுக மாவட்ட செயலாளர் வேலூர் ஆசாத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *