Breaking News

திருவாரூர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கினணந்த மாவட்ட பொதுக்குழு மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா தமுமுக மமக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் H.நவாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன், மாவட்ட பொருளாளர் M.H.சாகுல் அமீது ஆகியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் J.ஹாஜா கனி,மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் H.M.D. ரஹ்மத்துல்லாஹ்,இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் வெங்கலம் A. ஜபருல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பொதுச் செயலாளர் சான்றிதழ் வழங்கினார்.

பொதுக்குழு தீர்மானங்கள்:

தீர்மானம்:01
மக்களை மதரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிளவுபடுத்தும் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக CAA,NRC,NPR போன்ற சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

தீர்மானம்:02
ஜனநாயக போராட்டங்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழகத்தில் CAA,NRC,NPR போன்ற சட்டத்திற்க்கு எதிரா போராடுபவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தீர்மானம்:3
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கழிப்பறைகள் மிகவும் சுகாதார அற்ற நிலையில் உள்ளது அத்தகைய சுகாதார சீர்கேட்டை உடனடியாக சீர் செய்ய வேண்டும்.

இதில் துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *