Breaking News

புதுச்சேரி மஹேவில் கிரண்பேடி விழாவில் மாணவர்கள் மீது தடியடி: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

புதுச்சேரி மஹேவில் கிரண்பேடி விழாவில் மாணவர்கள் மீது தடியடி:
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

புதுச்சேரிப் பகுதியில் ஒன்றான மஹேவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகாத்மா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது கருப்பு நிற ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை காவல்துறையினர் கலந்துகொள்ள அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக கிரண்பேடிக்குக் கறுப்புக் கொடி காட்டி திரும்பி போ என்ற கோஷம் போட்ட மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்திய காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மஹே பகுதியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வழக்கம். அதனடிப்படையில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளைத் தடுத்து நிறுத்தியது ஏற்றுக்கொள்ள இயலாதது.

காவல்துறையின் அராஜக நடவடிக்கையை எதிர்த்துப் போராடி கைதாகியுள்ள மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஹிஜாப் அணிந்த மாணவிகளை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுத்ததற்கு கிரண்பேடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *