Breaking News

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில்
மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.சலீம் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்
M.சையது முஸ்தபா கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். மமக மாவட்ட துணைச் செயலாளர் A.முகமது லரீப் வரவேற்புரையாற்றினார். ஈரோடு மாவட்ட தலைவர் A.சித்திக் துவக்கவுரையாற்றினார். தோழமை கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திமுக மாநில செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *