Breaking News

பாமகவின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார் !

பாமகவின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி
மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார் ! 

இன்று தமுமுக & மமக தலைமைகத்தில் பாமக திருவண்ணாமலை மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சகோதரர்செய்யது அலி அவர்கள் தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ்,மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மமக மாநில பொருளாளர்
கோவை உமர் ஹாஜியார்,மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி அனிபா ஆகியோர் முன்னிலையில் ,மத்திய பாசிச பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராடிவரும் முன்னோடி அமைப்பான தமுமுக & மமகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்திய அரசு முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரவளித்து வாக்களித்தற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் பாமகவின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *