Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம்
-தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு!

தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்(CAA),மக்கள் தொகை பதிவேடு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NPR) சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் வண்ணமாக போராட்டங்களை முன் னெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள நிருபர் சங்க கூட்ட அரங்கில் இன்று 14.01.2020 நடைபெற்றது.

தமிழக மக்கள் ஓற்றுமை மேடையின் ஓருங்கிணைப்பாளர் பேரா.அருணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா,தமுமுக பொதுச்செயலாளர். முனைவர்.ஹாஜாகனி,மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத், INTJ தலைவர் S.M.பாக்கர், வெல்பர் பார்டி பொருளாளர் S.N.சிக்கந்தர் இஸ்லாமிய கூட்டமைப்பு ஓருங்கிணைப்பாளர் மௌலானா மன்சூர் காஷிபி, காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் தாவூத் மியாகான், SDPI சார்பாக உமர் பாரூக், PFI சார்பாக அன்சாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, பச்சை தமிழகம் அருள்தாஸ், வஹ்த்தே இஸ்லாமி புஹாரி உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்கள்,மாணவர் இயக்கங்கள், அரசியல் கட்சியினர் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அப்துல் சலாம், SMI மாநில துனை செயலாளர் குர்ஷித் உட்பட நிர்வாகிகள் பங்கு கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பாக மாநிலம் தழுவியளவில்

ஜனவரி-26 துண்டு பிரசுர இயக்கம் நடத்துவது என்றும்,

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி- 30 அன்று மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *