Breaking News

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை:
 மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் நிலையிலிருந்த காவல் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிருகத்தனமான செயலாகும்.

வில்சனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபாதக வன்செயலில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கக் கோருகிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *