Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி
சென்னை விமான நிலையம் முற்றுகை!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஜனவரி 08-2020 சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது.

பல்லாயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, எழுத்தாளர் வே.மதிமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், இஸ்லாமிய இயக்க தலைவர்கள், திராவிட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.சமூகநீதி மாணவர் இயக்கத்தினர், தோழமைகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *