Breaking News

பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக செயற்பாட்டாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு இன்று தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிருஷ்ணமூர்த்தி சங்கபரிவார் அமைப்பினரை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சாதி, மத, இனப் பிரிவினைகளைத் தூண்டி விடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தென்பாகம் காவல்துறையினர் இன்று காலை 10 மணியளவில் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் பாஜகவின் எச்.ராஜா மீது தமிழகமெங்கும் பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்தும் அவரை கைது செய்ய துணிவில்லாத காவல்துறை தோழர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறேன்

இப்படிக்கு
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *