Breaking News

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு

நாகை வடக்கு மாவட்டத்தில் நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நீடூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் சார்பாக “மாபெரும் கண்டன பேரணி” தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பேரணியில் தமுமுக மமக மாநிலதலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் J.அமீன் தமுமுக-மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் தமுமுக மாவட்ட செயலாளர் A.M.ஜீபைர்,மமக மாவட்ட செயலாளர் M.முபாரக் அலி தமுமுக மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் கஃபூர் மமக மாவட்ட துணை செயலாளர் M.ஜாஹிர் உசேன், IPP மாவட்ட செயலாளர் M.H.ரியாஜீதின், SMI மாவட்ட துணை செயலாளர் J.ஷஃபீக் அஹமது, ஒன்றிய, நகர,கிளை நிர்வாகிகள், சமுதாய இயக்க,கட்சி நிர்வாகிகள், நீடூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு குடியிரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *