Breaking News

ஜனவரி 8ல் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஜனவரி 8ல் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு
மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஜனவரி 8 அன்று பொதுத்துறை சங்கங்கள் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், அனைவருக்குமான பொது விநியோக முறையை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது, அனைவருக்குமான பொதுக் கல்வி மற்றும் சுகாதார நலத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை, தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றி அதனை முதலாளிகளுக்கு ஆதரவு சட்டமாக உருவாக்குவதை நிறுத்த வேண்டும் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் மாபெரும் அளவில் வெற்றி பெறச்செய்திட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *