Breaking News

உள்ளாட்சி தேர்தலில் மமக’வின் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி

நாகை வடக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மமக’வின் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. தமுமுக-மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட செயலாளர் A.M.ஜீபைர், மமக மாவட்ட செயலாளர் M.முபாரக் அலி,மாவட்ட பொருளாளர் P.முஹம்மது பாசித், தமுமுக மாவட்ட துணை செயலாளர் கஃபூர் மற்றும் மமக மாவட்ட துணை செயலாளர் ஜாஹிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் J.அமீன் ஆகியோர் கலந்து கொண்டு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட மமக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ஹாலித் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் தமுமுக-மமக மாவட்ட ஒன்றிய,நகர, கிளை கழக நிர்வாகிகள், கிளியனூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *