Breaking News

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவைக்கு வருகை தருவது மிக மோசமானதாக உள்ளதாகவும் அவர் விவாதங்களில் பங்கேற்றது குறைவு என்றும் செய்தி வெளிவந்தது.

மாநிலங்களவைக்கு அதிகம் வராத அன்புமணி ராமதாஸ் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதா  தொடர்பான வாக்களிப்பில்  மட்டும் பங்குகொண்டு மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பங்களிப்பு குறித்த விமர்சன செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள நிலையில்; அதன் அலுவலகத்திற்குள் சென்று பாமகவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அன்புமணி ராமதாஸ் குறித்து செய்தி எழுதிய செய்தியாளரும் தாக்கப்பட்டார் என்றும்  தகவல்கள் வந்துள்ளன.

ஜனநாயக நெறிமுறைகளை மீறி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *