Breaking News

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்!
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் 
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன்.

சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த டிவிட்டர் பதிவு உள்ளது.
எனவே, இந்த பதிவுக்குக் காரணமாக இருந்த தமிழக பாஜக மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *