Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் அமைதியான முறையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டனர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பேரணியில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்களும் அணிவகுத்து சென்றனர். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர்அல்போன்ஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *