Breaking News

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வீடுகள் அமைந்துள்ள கல்பாக்கம் நகரிய பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் தற்போது நுழைய முடியாதவாறு புதிய புதிய நுழைவாயில்கள் உருவாக்கி அவற்றை மூடியதை எதிர்த்து கடந்த
16ஆம் தேதி புதுப்பட்டினம்,சதுரங்கப்பட்டினத்தில் உள்ள முக்கிய நுழைவாயிலை மூடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கல்பாக்கம் நகரிய பகுதி என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் முன்னோர்கள் தலைமுறை தலைமாறையாக வாழ்ந்த பகுதியாகும். அங்கே தான் அவர்களின் வீடுகள், வயல்கள், வழிபாட்டடுத் தளங்களான கோவில்கள், மசூதி, தேவாலயங்கள், அடக்கத்தளங்கள் என எல்லாம் இருந்தது அனைத்தையும் அணுமின் நிலைய நகரியத்திற்காக கொடுத்தவர்கள் தான் இங்கு வாழும் சுற்றுப்புற கிராம மக்கள் என்பதை இந்நேரத்தில் நினைவு படுத்துகிறேன்.
இப்போதும் அப்பகுதியில் உள்ள வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அங்குதான் இந்த மக்களுக்கான தமிழ்நாடு அரசுப்பள்ளிகள், அரசு நூலகம், காவல்நிலையம், பேருந்து நிலையம், கிராம குழந்தைகளும் படிக்கும் மத்திய அரசு பள்ளிகள்,அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை, வங்கிகள், அஞ்சல் நிலையம் என அனைத்தும் உள்ளது

இந்நிலையில் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் நுழைவாயிலை மூடுவதும், கட்டுப்பாடுகள் விதிப்பதும், தங்கள் வாழ்விடங்களை வழங்கிவிட்டு அணுகதிர்வீச்சுநோய்களை சுமக்கும் மக்களை மேலும் அவமதிப்பதாகும். அதனை எதிர்த்து போராடிய 156 பேர் மீது “கொலை முயற்சி” உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது;மேலும் இச்செயல் சுற்றுவட்டார கிராம மக்களை கோபமூட்டுவதும் ஆகும்.

எனவே அணுமின்நிலைய நிர்வாகம் உடனடியாக வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் மறுக்கும் பட்சத்தில் பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி பாதிக்கபடும் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

ப.அப்துல் சமது
பொதுச் செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *